Sunday, 8 September 2013

மன அழுத்தத்திலிருந்து விடுபட சில எளிய வழிகள்

மன அழுத்தத்திலிருந்து விடுபட சில எளிய வழிகள்

(தொகுபபு; நாகேந்திரன் நாகேந்திரன்)
உழைக்கும் அனைவருக்கும் உண்டாகும் களைப்பு பலருக்கு நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்கும்.
ஆனால் எல்லாம் ஒரு அளவு தானே. அதுவே எல்லை மீறிய களைப்பாகி போனால் விபரீதம் தான் ஏற்படும்.
வேலையில் கெடு, பரீட்சை, காலக் கெடு என நம் அனைவரின் வாழ்விலும் அத்தகைய தருணங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவை நம் மன அழுத்தத்தின் அளவை பாதிப்பதால், நம் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும்.
தற்போது பெரும்பாலானோர் அதிக களைப்பால் மட்டுமின்றி, அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
ஏனெனில், இன்றைய காலத்தில் அலுவலகத்தில் உள்ள அதிகப்படியான வேலையால் மனமானது அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது.
அதுமட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
உதாரணமாக, மன அழுத்தம் இருந்தால், அதனைப் போக்க உள்ள சிறந்த வழிகளுள் ஒன்று தான் உடற்பயிற்சி. ஆனால் அதை செய்வதற்கே நேரம் இல்லை. பின் எப்படி மன அழுத்தம் குறையும்.
ஆகவே இந்த மன அழுத்தத்தில் இருந்து அமைதியாக மாற சில அருமையான யோசனைகளை பார்ப்போம்.
* வேலைப்பளு அதிகமாக இருந்தால் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறம்பட வேலை செய்தாலும் கூட கவனம் சிதறி மனம் அலை பாய்வது நடக்கத் தான் செய்யும்.
* ஓய்வெடுக்க வேண்டுமானால் நீட்சி ஒரு எளிய வழியாகும். அதற்கு உடலை புரிந்து கொண்டு மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடலை அப்படி இப்படி அசைவு கொடுத்தால், தசை இறுக்கம் நீங்கும். மேலும் இது உங்கள் வேலையில் உங்களை கவனம் செலுத்த வைக்கும்.
* வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் குளியல் போட்டால் பல அதிசயங்களை அது காட்டப்போவது உறுதி. அதிலும் உங்கள் தசைகளின் இறுக்கம் நீங்கி அமைதி பெற இது ஒரு சிக்கனமான வழியாகும்.
* பச்சை பசுமையான இயற்கை சார்ந்த இடங்கள், கடல் சார்ந்த இடங்கள் அல்லது மலை சார்ந்த இடங்கள் போன்றவற்றில் பொழுதை கழிப்பதில் கிடைக்கும் அமைதி வேறு எங்கு கிடைக்கும்? இவ்வாறு இயற்கைக்கு அருகில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டால், தானாக அமைதி வந்து சேரும்.
* வெளியில் பிட்சா சாப்பிட எச்சில் ஊறலாம். ஆனால் வீட்டில் சமைத்து ஆரோக்கியமான உணவை உண்ண நேரம் எடுத்தாலும் கூட, அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும். அது உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு, மன நிலையையும் ஊக்கப்படுத்தும்.
* செல்லப்பிராணிகள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உங்கள் அன்பை வெளிப்படுத்த உதவும். இதனால் உங்கள் மன அழுத்தம் நீங்கும்.
* நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, உடன் வேலை செய்பவர்களுடன் வேடிக்கையாக பேசுவது, நகைச்சுவை புத்தகம் படிப்பது, குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது போன்றவைகள் உங்களுக்கு மன நிம்மதியை அளித்து அமைதியை ஏற்படுத்தும்
* மனம் அமைதி பெறுவதற்கு உங்களுக்கு பிடித்த ஸ்பாவிற்கு சென்று பெடிக்யூர் அல்லது பேஷியல் செய்து சருமத்திற்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்துங்கள்.
* உண்மையிலேயே அமைதி பெற வேண்டுமானால் மலை உச்சிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தால் நிச்சயம் தியானத்திற்கான பலனை காணலாம். முக்கியமாக அது மன அழுத்தத்தை நீக்கும்.
* நேர்மறையான சிந்தனைகள் உங்கள் மனநிலையை நல்ல விதமாக ஊக்கமளிக்கும். அதனால் எதிர்மறையான சிந்தனைக்கு செல்லாமல் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்பத் தொடங்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறது என்று நம்புங்கள்.
* வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்தால், உங்களுக்கு நீங்களே பரிசு பொருட்கள், சாக்லெட் போன்றவற்றை பரிசளியுங்கள்.
* மன அழுத்தத்தை நீக்கும் வகையில் உள்ள இசையை கேட்டு அமைதி பெறுங்கள். முக்கியமாக அதிக தாளத்துடன் கூடிய இசையை கேட்டு மனநிலையை ஊக்கப்படுத்துங்கள்.
* சமைப்பது என்பது ஒரு சிகிச்சை போன்றதாகும். இதுமன அழுத்தம் தரும் விடயத்தில் இருந்து மனதை மாற்றும். மேலும் சுவையான ஆரோக்கியமான உணவையும் உண்ணலாம் அல்லவா?
* வீட்டிற்கு சென்றதும் ஆடைகளை மாற்றி, பருத்தி துணியால் செய்யப்பட ஆடைகளை அணியுங்கள். இது நிச்சயம் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும்.
* வீட்டில் ஒரு இடத்தை தெரிவு செய்து அங்கே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து அமைதியை பெறுங்கள். கண்டிப்பாக ஓய்வு எடுக்கும் நேரம் கைபேசியை எல்லாம் அணைத்துவிடுங்கள்.
* முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த எளிய வழி உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதிலும் இதனால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்குவதால் முகம் குளிர்ச்சி அடைந்து புத்துணர்ச்சி பெறும்.
* மெதுவாக, ஆழமாக மூச்சு விடுவதால் இரத்தக் கொதிப்பு குறையும். முக்கியமாக யோகாவில் உள்ள பிராணயாமம் முறைப்படி மூச்சு விட்டால் அதாவது ஒரு துவாரத்தில் மட்டும் மூச்சு விடுவதால் உங்கள் கவலைகள் நீங்கும்.
* இன்னும் கொஞ்சம் நேரம் வேலை பார்த்தால் அதிக வேலைகளை செய்து முடிக்கலாம் என்று மனம் நினைக்கும். ஆனால் தூக்கம் மிகவும் அவசியம். போதுமான அளவு தூக்கம் கண்டிப்பான முறையில் அவசியமான ஒன்றாகும்.
* தலைக்கு மசாஜ் செய்வதால் தலையில் இரத்த ஓட்டம் சீராகும், தலைவலி குறையும், தூக்கம் அதிகரிக்கும், மன அழுத்தம் நீக்கும் மற்றும் இதர நோய்களில் இருந்தும் காக்கும்.
* எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவது உங்களுடன் நீங்களே உரையாட ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் இது மன அழுத்தத்தையும் குறைக்கும்.

1 comment:

  1. Sands Casino
    Enjoy the latest gaming, video หาเงินออนไลน์ poker and slots septcasino at the Sands Casino in Sands Casino, Arizona. Get your Vegas VIP package and play with best bonuses 온카지노 at the Sands  Rating: 4 · ‎Review by Desert Staff

    ReplyDelete