நட்சத்திர பழத்தில் உள்ள சத்துக்கள்
கோலாலம்பூர், ஆக. 13- நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருப்போம். இந்தப் பழம் தாய்லாந்து, வியாட்நாம், சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.
நம் நாட்டில் மலாய்காரர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் பழங்களில் நட்சத்திர பழமும் ஒன்று. அதேசமயம் இதனை மலாய் மொழியில் ‘புவா பிந்தாங்’ என்றும், ஆங்கிலத்தில் ‘ஸ்டார் புருட்’ என்று இங்கு அழைக்கப்படுகிறது.
இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது.
மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். நட்சத்திர பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி நட்சத்திர பழத்திற்கு உண்டு.
நட்சத்திர பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நட்சத்திர பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது.
எனவே, அனைத்து சத்துக்கள் நிறைந்த இப்பழத்தை உண்டு நோயற்ற வாழ்க்கை வாழ்வோமாக!